சாலையில் உயிருக்குப் போராடிய சிறுவன், சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர் - காணொளி
மின்சாரம் தாக்கிய ஒரு சிறுவனுக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கப்படும் காட்சி இது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த மருத்துவர் ரவளி, சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை சி.பி.ஆர் சிகிச்சை மூலம் காப்பாற்றினார். மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுவன் தற்போது நலமுடன் உள்ளார்.
“சுயநினைவின்றி இருந்த ஒரு சிறுவனைப் பார்த்தேன். நான் அங்கு நின்றவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். மின்சாரம் தாக்கியதாக அவர்கள் கூறினர். சிறுவனைப் பரிசோதித்தேன்," என்றார்.
“மூச்சையும், நாடித் துடிப்பையும் சோதித்தேன். சிறுவன் மூச்சுவிடவில்லை. பிராடிக்காரியா (வழக்கத்திற்கு குறைவான இதயத்துடிப்பு) நிலையில் இருந்தார். உடனடியாகத் தரையில் படுக்க வைக்கச் சொல்லி சி.பி.ஆர் சிகிச்சை செய்யத் தொடங்கினேன். சி.பி.ஆர் என்பது ஒன்றுமில்லை, வாய் வழியாக அந்த நபருக்கு மூச்சை செலுத்தி மார்பை அழுத்துவது ஆகும்,” என்று மருத்துவர் ரவளி கூறினார்.
அடுத்து என்ன நடந்தது?
முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



