காணொளி: உயரமான ரயில் பாலத்தில் நடந்து சென்ற பயணிகள் - ஏன் தெரியுமா?

காணொளிக் குறிப்பு, உயரமான ரயில்பாதையில் நடக்கவைக்கப்பட்ட பயணிகள்
காணொளி: உயரமான ரயில் பாலத்தில் நடந்து சென்ற பயணிகள் - ஏன் தெரியுமா?

சிங்கப்பூரில் மின் குறைபாடு காரணமாக ஒரு ரயில் பாதியில் நின்றதால் ரயிலில் இருந்த பயணிகள் உயரமான ஒரு ரயில் பாதையில் சிக்கிக்கொண்டனர்.

வெளியான வீடியோவில், உயரமான ஒரு பாலத்தின் மீது ஒரு குழு பயணிகள் ஒரே வரிசையில் நடக்கின்றதுபோல் காணப்படுகிறது.

அவர்கள் அந்த உயரமான பாதையில் நடந்து அருகிலுள்ள நிலையத்துக்கு திரும்பச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

ரயிலின் இயக்குநரான SBS டிரான்சிட் தெரிவித்ததாவது, அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறங்கினர் மற்றும் மின் விநியோகம் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு