ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள் - இந்தியாவில் 'ஜோடிதாரா' வழக்கம் எங்குள்ளது?

காணொளிக் குறிப்பு, ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்
ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள் - இந்தியாவில் 'ஜோடிதாரா' வழக்கம் எங்குள்ளது?

ஹிமாச்சல் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், பிரதீப் நேகி, கபில் நேகி ஆகிய இரண்டு சகோதரர்களை மணந்தார்.

பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகப் பதிவுசெய்யப்பட்ட ஹாடி சமூகத்தின் 'ஜோடிதாரா' என்ற பழங்கால நடைமுறையின்படி இந்த திருமணம் நடைபெற்றது. உள்ளூர் மொழியில் 'ஜோடிதாரா' அல்லது 'ஜாஜ்டா' என்று அழைக்கப்படும் இந்த வகைத் திருமணம், சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் பாரம்பரியம் ஆகும்.

கலாசார பாரம்பரியத்திற்கான உதாரணமாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் இந்த திருமணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு