காஸாவின் நுசரட் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் - குறைந்தது 7 பேர் பலி

காணொளிக் குறிப்பு, காஸாவின் நுசரட் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் - குறைந்தது 7 பேர் பலி
காஸாவின் நுசரட் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் - குறைந்தது 7 பேர் பலி

வியாழக்கிழமையான நேற்று காஸாவின் நுசரட் முகாம் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவின் முக்கிய அகதிகள் முகாம்களில் ஒன்றாக நுசரட் முகாம் உள்ளது.

லெபனானில் இஸ்ரேல் ஹெஸ்பொலா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில் காஸாவில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 13 மாதங்களுக்கும் மேலாக காஸாவில் நடந்து வரும் போரில் கிட்டத்தட்ட 44,200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 2023, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தப் போர் ஏற்பட்டது. அந்தத் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)