பாலத்தீனம்: 'முகாமில் பயத்துடன் வாழ முடியாது' - இடிந்த வீட்டுக்கே திரும்பிய காஸா குடும்பம்

காணொளிக் குறிப்பு, பாலத்தீனம்: 'முகாமில் பயத்துடன் வாழ முடியாது' - இடிந்த வீட்டுக்கே திரும்பிய காஸா குடும்பம்
பாலத்தீனம்: 'முகாமில் பயத்துடன் வாழ முடியாது' - இடிந்த வீட்டுக்கே திரும்பிய காஸா குடும்பம்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தங்களின் வீடு அழிக்கப்பட்ட பிறகு, குல்லாப் குடும்பம் வீடற்ற மற்ற பாலத்தீனர்களுடன் முகாமுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனினும் கூட்ட நெரிசல், சுகாதாரமற்ற சூழல் காரணமாக அவர்கள் இடிந்துபோன தங்கள் வீட்டிற்கே மீண்டும் திரும்பியுள்ளனர். கான் யூனிஸில் உள்ள அவர்கள் வீட்டின் எஞ்சியிருக்கும் இடிபாடுகளுக்கு மத்தியில் இந்த குடும்பம் தற்போது வசித்து வருகிறது.

ஒப்பீட்டளவில் இங்கு வசிப்பது தீங்கு குறைவானது என்று ராம்சி குல்லாப் கூறுகிறார். படிக்கட்டுகளில் ஒரு சிறிய அடுப்பை வைத்து தங்களுக்கான ரொட்டியை சுட்டு அவர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)