நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

தேர்தல் ஆணையர்கள்

பட மூலாதாரம், ECI

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சில மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு நாளை வெளியிடப்படுகிறது.

நாளை மார்ச் 16ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையர்கள் இது தொடர்பான விவரங்களை அறிவிப்பார்கள்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக இருந்த இரு தேர்தல் ஆணையர் இடங்களுக்கு புதிதாக இருவர் நியமிக்கப்பட்டனர். புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களின் கூட்டம், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)