தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெண் - காணொளி
தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெண் - காணொளி
தனியார் பேருந்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். டிசம்பர் 3 ஆம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் நோக்கி, பெண் ஒருவர் தனியார் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.
பேருந்தின் முன்பக்க படிக்கட்டின் அருகே நின்று கொண்டிருந்த அவர் திடீரென தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



