திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்றுவதில் எழுந்த சர்ச்சை பற்றி உள்ளூர் மக்கள் கூறுவது என்ன? - காணொளி
திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்றுவதில் எழுந்த சர்ச்சை பற்றி உள்ளூர் மக்கள் கூறுவது என்ன? - காணொளி
திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்த இடத்தில், நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் போராட்டக்காரர்கள், தடுப்புகளைத் தாண்டி மலைக்கு ஏற முயன்றனர். இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்து அமைப்பினர் பலர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுவது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



