உத்தராகண்டில் வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்படும் காட்சி
உத்தராகண்டில் வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்படும் காட்சி
உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. உத்தரகாஷியில் நடந்த இந்த சம்பவத்தில் இதனால் ஆற்றின் ஓரமாக இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொளி வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகள் போர் கால அடிப்படையில் நடந்துவருவதாக உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் சமூக வலைதள பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு மற்றும் காயம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



