ஷமி, பும்ரா: நம்பிக்கையுடன் இருந்த இங்கிலாந்தை சிதறடித்தது எப்படி?
லக்னோவில் நேற்று (ஞாயிறு, அக்டோபர் 29) நடந்த உலகக் கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில், வெறும் 9 ரன்கள் இடைவெளியில் 4 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்துக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுத்தது இந்தியா.
ஷமியின் துல்லியமான பந்துவீச்சுத் தாக்குதல் இங்கிலாந்தை திணறடித்தது. கூடுவே, பும்ராவின் நேர்த்தியான பந்துவீச்சு, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து மாயாஜாலம் என இந்திய பவுலர்களின் கூட்டு முயற்சியால் இங்கிலாந்தை வெறும் 129 ரன்களில் சுருட்டி, 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்தியா.
நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோற்காமல் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை படைத்த ஒரே அணியாக இந்தியா வலம் வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



