கேமரா மீதான தீராக் காதல்- கேமரா வடிவில் வீட்டை கட்டிய புகைப்படக்காரர்
கர்நாடக மாநிலம் பெல்கமில் உள்ள இந்த குடும்பம், கேமரா மீதான அவர்களின் தீராக் காதலுக்கு புகழ்பெற்றது. புகைப்படக் கலைஞரான ரவி ஹோங்கல் கேமரா போன்ற வடிவத்தில் தனது வீட்டை கட்டியுள்ளதோடு, தனது மகன்களுக்கு கெனான், நிக்கான், எப்சன் என கேமராவின் பெயர்களையே வைத்துள்ளார்.
ரவி ஹோங்கல் கடந்த 35 ஆண்டுகளாக புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். உள்ளூர் திருவிழாவில் முதன்முறையாக கேமராவை பார்த்த அவருக்கு அதன்மேல் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் புகைப்படம் எடுப்பதை தனது பொழுதுப்போக்காக தொடங்கி தொழிலாகவும் மாற்றிக்கொண்டார்.

கேமரா போன்ற வடிவத்தில் வீடு கட்டவேண்டும் என்பது அவரது பெருங்கனவாக இருந்தது. பலரும் அவரைக் கேலி செய்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 2016இல் இந்த வீட்டைக் கட்டி முடித்த ரவி, வீட்டுக்கு கிளிக் என்ற பெயரை வைத்துள்ளார்.
ரவியின் மனைவி ரூபாவும் புகைப்படக் கலைஞர்தான். இந்தத் தம்பதியின் மூன்று மகன்களுமே கேமரா தொடர்பான படிப்பைப் படித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



