காணொளி: அரிய தாதுக்களுக்கு புதிய விதிகளை விதிக்கும் சீனா - அமெரிக்காவுக்கு எதிரான ஆயுதமா?
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வரும் நிலையில், மேம்பட்ட தொழில்நுட்ப உற்பத்திக்கு தேவையான அரிய தாதுக்கள் மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.
உலகின் அரிய தாதுக்களில் சுமார் 90%-ஐ சீனா செயலாக்குகிறது. அவை சூரிய ஆற்றல் பேனல்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே எதிர்பார்க்கப்படும் சந்திப்பில் பேரம் பேசுவதற்கான முக்கிய விஷயமாக இது இருக்கும்.
எனவே இனி வெளிநாட்டு நிறுவனங்கள் சிறிய அளவிலான அரிய தாதுக்களைக் கொண்ட பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூட சீன அரசாங்கத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அதோடு, அதன் பயன்பாட்டையும் விளக்க வேண்டும்.
அதேபோல, லித்தியம் பேட்டரிகள் மற்றும் சில வகையான கிராஃபைட் ஏற்றுமதியிலும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை சீனா அறிவித்துள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியில் அத்தியாவசியமானதாக உள்ள இவை, பெரும்பாலும் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அரிய தாதுக்கள் என்றால் என்ன? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



