'இரானியர்கள் சிறந்த வியாபாரிகள், ஆனால் இதை மட்டும் செய்ய முடியாது' - டிரம்ப் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, 'இரானியர்கள் சிறந்த வியாபாரிகள், ஆனால் இதை மட்டும் செய்ய முடியாது' - டிரம்ப் கூறுவது என்ன?
'இரானியர்கள் சிறந்த வியாபாரிகள், ஆனால் இதை மட்டும் செய்ய முடியாது' - டிரம்ப் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூன் 24) செய்தியாளர்களிடம், "இரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையோ, அணு ஆயுதத்தையோ வைத்திருக்க முடியாது." என்றார்.

அப்போது, இரானில் ஆட்சி மாற்றத்தைக் காண விரும்புகிறீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, "இல்லை. இருந்திருந்தாலும், இருந்திருக்கும். ஆனால், அது வேண்டாம். எல்லாம் விரைவாக முடிவுக்கு வர வேண்டும் என விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும். குழப்பமான சூழல் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

அதனால், அது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். இரானியர்கள் திறமையான வர்த்தகர்களாகவும், சிறந்த வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களிடம் நிறைய எண்ணெய் வளம் உள்ளது. அவர்களால் மீண்டும் கட்டியெழுப்பவும் சிறப்பாகச் செயல்படவும் முடியும். ஆனால், அவர்கள் ஒருபோதும் அணு ஆயுதம் பெற முடியாது. அதைத் தவிர, அவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு