ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

காணொளிக் குறிப்பு, க்ரேவிங் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

ஒரு குறிப்பிட்ட உணவை பார்த்ததும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? இல்லை என்றால் ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உங்களது மூளையில் ஒட்டிக்கொண்டு இருக்கிறதா?

இதற்கு பெயர்தான் Food Craving என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. மன அழுத்தம், உறக்கம், ஹார்மோன்கள் குறைபாடு என்று இந்த க்ரேவிங் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றது.

"உடலின் ஆற்றல், வயது, பாலினம், தூக்கம், ஊட்டச்சத்து குறைப்பாடு போன்ற பல காரணங்களால் இந்த க்ரேவிங் ஏற்படலாம் என்று" மருத்துவர் அர்ச்சனா குஷ்வாஹா கூறுகிறார்.

உளவியல் சார்ந்து, உணர்வு சார்ந்து மற்றும் சமூகம் சார்ந்த என க்ரேவிங் ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இது குறித்த முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)