ஜப்பான்: சாலையில் தீடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த லாரி - 7 நாட்களாக ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்

காணொளிக் குறிப்பு,
ஜப்பான்: சாலையில் தீடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த லாரி - 7 நாட்களாக ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்

ஜப்பான் யாசியோவின் சாலையில் ஏற்பட்ட ஒரு பெரும் பள்ளத்தில், ஒரு லாரி விழுந்தது. அந்த லாரியின் ஓட்டுநர் பள்ளத்தில் சிக்கிக்கொண்டார்

இந்த பள்ளம் ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவிற்கு விரிவடைந்துள்ளதால், மீட்புப் பணிகள் சவாலானதாக உள்ளன.

கடந்த ஜனவரி 28-ம் தேதி திடீரென ஏற்பட்ட இந்த பள்ளத்தில் 74 வயதான லாரி ஓட்டுநர் விழுந்துள்ளார். ஏழாவது நாளாக இன்றும் மீட்பு பணி நடந்து வருகிறது. நிலத்தடியில் உள்ள ஒரு கழிவுநீர் குழாயின் உடைப்பு காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், அருகிலுள்ள வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)