‘செயற்கை நுண்ணறிவை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்’- எச்சரிக்கும் சுந்தர் பிச்சை

காணொளிக் குறிப்பு,
‘செயற்கை நுண்ணறிவை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்’- எச்சரிக்கும் சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவுக்கான தேவை குறைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும் என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசிய சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு மீதான முதலீட்டின் வளர்ச்சி ஓர் "அசாதாரண தருணம்" என்றாலும், தற்போது அதில் சில "பகுத்தறிவற்ற தன்மை" உள்ளது என்றார்.

கூகுளின் கலிபோர்னியா தலைமையகத்தில் ஒரு விரிவான பிரத்யேக நேர்காணலில், அவர் எரிசக்தி தேவைகள், காலநிலை இலக்குகளை அடைவதில் தாமதம், பிரிட்டனில் முதலீடு, அவரது ஏ.ஐ மாதிரிகளின் துல்லியம் மற்றும் வேலைகளில் ஏ.ஐ புரட்சியின் தாக்கம் ஆகியவை குறித்துப் பேசினார்.

செயற்கை நுண்ணறிவுச் சந்தையின் நிலை குறித்து முன்பைவிட மிக அதிகமாகத் தீவிரமான ஆய்வுகள் நிகழும் நேரத்தில் இந்த நேர்காணல் வந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு