காணொளி: மன அழுத்தத்தால் அதிகமாக சாப்பிடுகிறீர்களா? - கட்டுப்படுத்த 3 டிப்ஸ்
உங்களுக்கும் மன அழுத்தம் இருக்கும்போது உடனேயே சாக்லேட், சிப்ஸ், மிக்சர் என சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என தோன்றுகிறதா? அது ஏன்?
நம் மூளைக்கும் குடலுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. உடம்பில் இருக்கும் "vagus nerve" என்கிற ஒரு நரம்பு நம் மூளையையும் வயிற்றையும் இணைக்கிறது.
அதாவது, வயிறு நிறைந்தால், ஆற்றல் தேவையா என்பதை மூளைக்கு சமிக்ஞை அனுப்பும் வழி இதுதான்.
நாம் மிகவும் மன அழுத்தமாக இருக்கும்போது இந்த நரம்பின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.
அதனால் இரண்டு விஷயங்கள் நடக்கலாம், ஒன்று பசியே இருக்காது அல்லது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என தோன்றும்.
இதில் இரண்டாவது விஷயம் தான் மன அழுத்தத்தின்போது சாப்பிடுவது. அப்போது தான், நம்மை அறியாமலேயே, நாம் சர்க்கரை அதிகமாக உள்ள இனிப்பு வகைகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தேடிப் போகிறோம்
ஆனால், இப்படி தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகமாகி, ரத்த சர்க்கரை அதிகரித்து நீரிழிவு மாதிரியான பிரச்னைகள் வரலாம், இதனால் நமக்கு இன்னும் மன அழுத்தம் அதிகமாகலாம்.
இது ஒரு சுழற்சி மாதிரி என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதை கட்டுப்படுத்த மூன்று டிப்ஸ்-ஐ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த மூன்று டிப்ஸ்கள் என்ன? விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



