சுனிதா வில்லியம்ஸ்: 8 நாட்கள் விண்வெளிக்குச் சென்றவர் 8 மாதங்கள் சிக்கியது எப்படி?

காணொளிக் குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் 2025 வரை பூமி திரும்ப முடியாதா? என்ன சிக்கல்?
சுனிதா வில்லியம்ஸ்: 8 நாட்கள் விண்வெளிக்குச் சென்றவர் 8 மாதங்கள் சிக்கியது எப்படி?

ஜூன் 5ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ், பாரி புட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு சோதனைப் பயணத்திற்காகச் சென்றபோது, சில நாட்களில் பூமிக்குத் திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.

இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அவர்கள் இன்னும் பூமிக்கு மேலே இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மிதந்துகொண்டு இருக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக்கூட விண்வெளியில் கழிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏன்? என்ன நடந்தது? இருவரும் பூமிக்குத் திரும்புவதில் உள்ள சிக்கல் என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)