உச்சநீதிமன்றத்தில் வாதாடிய செவித்திறனற்ற முதல் பெண் வழக்கறிஞர் - காணொளி

காணொளிக் குறிப்பு, உச்சநீதிமன்றத்தில் சைகை மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் சாரா சன்னி தனது வழக்கை வாதாடியுள்ளார்
உச்சநீதிமன்றத்தில் வாதாடிய செவித்திறனற்ற முதல் பெண் வழக்கறிஞர் - காணொளி

27 வயதான சாரா சன்னி பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி.

ஆனால் அவர் இப்போது மாற்றத்தின் முகமாகத் திகழ்கிறார்.

ஆம், வழக்கறிஞரான சாரா, உச்சநீதிமன்றத்தில் சைகை மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் வழக்காடிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞருக்குச் சைகை மொழிபெயர்ப்பாளர் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கீழ் நீதிமன்றங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர் அனுமதிக்கப்படாததால், சாரா எழுத்து மூலமாக தன் வழக்குகளை வாதாடி வந்தார்.

ஆனால், இப்போது உச்சநீதிமன்றத்தின் செயலையே அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்றினால் பல செவித்திறனற்ற வழக்கறிஞர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் சாரா சன்னி.

அவரது கதையை அவரே சொல்கிறார் இந்தக் காணொளியில்...

உச்சநீதிமன்றத்தில் வாதாடிய செவிதிறனற்ற முதல் பெண் வழக்கறிஞர்

பட மூலாதாரம், SARAH SUNNY

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)