பின்லாந்து: புவியின் வெப்பநிலையைக் குறைக்க துர்கு நகரின் பெண்கள் தலைமையிலான குழு எப்படி உதவுகிறது?

காணொளிக் குறிப்பு, பின்லாந்து: புவியின் வெப்பநிலையைக் குறைக்க துர்கு நகரின் பெண்கள் தலைமையிலான குழு எப்படி உதவுகிறது?
பின்லாந்து: புவியின் வெப்பநிலையைக் குறைக்க துர்கு நகரின் பெண்கள் தலைமையிலான குழு எப்படி உதவுகிறது?

தென்மேற்கு பின்லாந்தின் துர்கு நகரம், காலநிலை மாற்றத்திற்கு ஒரு உறுதியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. 2029க்குள், 'கார்பன் நியூட்ரல்' நிலையை அடையும் முதல் பின்லாந்து நகரமாக மாற அது திட்டமிட்டுள்ளது.

பின்லாந்தில், தனிநபர் CO2 உமிழ்வை குறைவாகக் கொண்ட நகரம் துர்கு. கழிவுநீரில் இருந்து சுத்தமான ஆற்றலை உற்பத்தி செய்வது இதற்கு ஓரளவு உதவுகிறது.

"துர்கு, உலகின் மாசுபட்ட கடல்களில் ஒன்றான பால்டிக் மூலம் சூழப்பட்டுள்ளது. எனவே இங்குள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம், கடலை சுத்தப்படுத்துவதற்கான தீர்வின் ஒரு பகுதியாகும். துர்கு மக்கள் அனைவருக்காகவும் இதைச் செய்கிறார்கள்." என்கிறார் துர்கு நகர மேயர், மின்னா அர்வே.

பனிப்பொழிவு இல்லாத பருவத்தில் 59% மக்கள், வாரம் ஒரு முறையாவது சைக்கிள் ஓட்டுகிறார்கள்.

இங்கு 2023இல், நகரின் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த, 1,00,000 சதுர மீட்டர் புல்வெளி, மலர் செடிகளால் நிரப்பப்பட்டது.

துர்குவில், பருவநிலை குறித்து இளம் வயதிலேயே கற்பது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. துர்குவின் பணிகள், பெண்கள் மட்டுமே உள்ள தலைமைக் குழுவின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)