"குஜராத்தில் இடிந்த பாலம், ஆற்றில் சிக்கிய வாகனங்கள்" - என்ன நடந்தது?
குஜராத்தின் வதோதரா - ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் கம்பீரா பாலம் புதனன்று இடிந்து விழுந்தது.
மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் விதமாக மஹிசாகர் ஆற்றில் அமைந்திருந்த இந்த பாலத்தின் நடுபகுதி இடிந்ததில் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.
இரு வாகனங்கள் பாலத்தில் தொங்கியப்படி இருப்பதை கான முடிகிறது.
மத்திய குஜராத் பகுதியில் உள்ள பிபிசி குஜராத்தி குழுவினர், மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள இந்த பாலம் பெரியளவில் உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த பாலம் வதோதரா மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த சம்பவத்தையறிந்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் தற்போது வரை என்ன நடந்துள்ளது, அதிகாரிகள், அமைச்சர்கள் என்ன கூறியுள்ளனர், பாலத்தின் நிலை பற்றி உள்ளூர் மக்கள் அளித்த புகார்கள் என்ன ஆனது? என்பனவற்றை இந்தக் காணொளியில் முழுமையாக காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



