இலங்கை: அதிபர் அநுர குமாரவிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

காணொளிக் குறிப்பு, இலங்கையின் புதிய அதிபரிடம் மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பார்ப்புகள் என்ன?
இலங்கை: அதிபர் அநுர குமாரவிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், பொருளாதார நெருக்கடி குறைய வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

கடன் சுமை, விலைவாசி உயர்வு, பொருளாதார சிக்கல் நிலவும் காலத்தில் பொறுப்பேற்றுள்ளார் அதிபர் திஸாநாயக்க. அவர் பொறுப்பேற்பதற்கு முன்பாக, சர்வதேச நிதி முனையத்திடம் பேசி வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வருவேன் என உறுதி அளித்திருந்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தால் தங்கள் அன்றாட வாழ்வின் சுமை குறையும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான நடவடிக்கைகளை புதிய அதிபர் எடுப்பார் என்று எதிர்ப்பார்க்கிறர்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)