காணொளி: கடலூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 72 வயது 'இளைஞர்'
காணொளி: கடலூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 72 வயது 'இளைஞர்'
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான செல்வமணி, படிப்பதற்கு வயது தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். ஏற்கெனவே பல படிப்புகளை முடித்து பட்டங்கள் பெற்றுள்ள அவர், தற்போது அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னியல் துறையில் 16 முதல் 20 வயது இளைஞர்களுடன் அமர்ந்து பாடம் கற்று வருகிறார்.
தான் படிப்பது, தனது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் மட்டுமே என்று அவர் கூறுகிறார். பல இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிறகே, இந்த கல்லூரியில் தனக்கு இடம் கிடைத்ததாகவும் அவர் கூறுகிறார்.
படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் தினம் 50 கி.மீ பயணம் செய்கிறார். கல்லூரி வளாகத்தில் அனைவருக்கும் ஊக்கமாக இருந்து வரும் அவர், தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற இலக்குடன் இருப்பதாக கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



