'எங்குமே பாதுகாப்பு இல்லை' - தப்பிக்க ரஃபா எல்லையில் கூடியுள்ள பாலத்தீனர்கள்

காணொளிக் குறிப்பு, காஸாவின் தெற்கில் உள்ள ரஃபா கடவுப்பாதை அருகே பாலத்தீனர்கள் குழுமி நிற்கின்றனர்.
'எங்குமே பாதுகாப்பு இல்லை' - தப்பிக்க ரஃபா எல்லையில் கூடியுள்ள பாலத்தீனர்கள்

ரஃபா என்பது காஸா தென்கோடிப் பகுதியில் அந்த நகரத்தில் இருந்து வெளியே செல்வதற்கான பாதை. இது எகிப்தின் சினாய் தீபகற்பத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

இஸ்ரேல் அறிவித்துள்ள தரைவழித் தாக்குதல் தொடங்கும் முன்பாக ரஃபா வழியாக வெளியே சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன், பாலத்தீனர்கள் பலர் ரஃபா எல்லையில் கூடியுள்ளனர்.

ரஃபா கடவுப்பாதையில்

மக்கள் வெளியேறவும், காஸாவுக்கான பிற நாடுகளின் நிவாரணப் பொருட்கள் உள்ளே வரவும் ரஃபா எல்லை சில நேரம் திறக்கப்படும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனினும் எந்த நேரத்தில் திறக்கப்படும் என்ற விவரம் செய்திகளில் இல்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)