வயநாடு: இடதுசாரிகளை எதிர்த்து ராகுல் போட்டியிடும் தொகுதியின் நிலைமை என்ன? - பிபிசி கள ஆய்வு
கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் களமிறங்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி. காங்கிரஸ் செல்வாக்குடன் திகழும் இந்தத் தொகுதியை இந்த முறை கைப்பற்றிவிட இடதுசாரிகளும் பா.ஜ.க-வும் கடுமையாக முயல்கிறார்கள்.
கேரளாவில் அரசியல் அமைதி நிலவும் தொகுதிகளில் ஒன்று வயநாடு. 2009-இல் தொகுதி மறுசீரமைப்பை ஒட்டி உருவாக்கப்பட்ட வயநாடு நாடாளுமன்றத் தொகுதி, 2019-வரை யார் கவனத்தையும் ஈர்க்காத ஒரு தொகுதியாகத்தான் இருந்தது.
2019-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, அமேதி தொகுதி தவிர வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதும் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் தொகுதியாக மாறியது இந்தத் தொகுதி.
அந்தத் தேர்தலில் வயநாடு தொகுதியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ராகுல் காந்தி, இந்த முறையும் அதே தொகுதியில் களமிறங்கியிருப்பதால், மீண்டும் தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.
விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தத் தொகுதியில் மானந்தவாடி (தனி), சுல்தான் பதேரி (தனி), வண்டூர் (தனி), கல்பற்றா, திருவம்பாடி, எரநாடு, நிலாம்பூர் என ஏழு தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதில் மானந்தவாடி, சுல்தான் பதேரி, கல்பற்றா ஆகிய தொகுதிகள் மட்டுமே வயநாடு மாவட்டத்தில் உள்ளன. திருவம்பாடி கோழிக்கோடு மாவட்டத்திலும் எரநாடு, நிலாம்பூர், வண்டூர் ஆகிய தொகுதிகள் மலப்புரம் மாவட்டத்திலும் அமைந்திருக்கின்றன.
இந்தத் தொகுதியில் தேர்தல் நிலவரம் எப்படியிருக்கிறது?
முழு விவரம் காணொளியில்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



