சிகரம் தொட்ட சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் - சிறப்புத் தகவல்கள்
1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்திருந்தவர் என்ற டான் பிராட்மேனின் சாதனையை (29) முறியடித்து 34 சதங்களை குவித்தவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராய் விளங்கியவர் கவாஸ்கர்.
1987 ஆம் ஆண்டின் காலகட்டத்தின்படி மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட்டர்களில் மிக முக்கியமானவராக கருதப்பட்டவர் சுனில் கவாஸ்கர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியோடு நவம்பர் 5, 1987-ல் சுனில் ஓய்வு பெற்றபோது சர்வதேச அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்க்கப்போகும் அடுத்த இந்திய வீரர் யார் என்ற கேள்வி எழுந்தது.
சரியாக ஒரு வருடம் கழித்து 1988ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் நாள் அன்று குஜராத்துக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் போட்டியொன்றில் களமிறங்கிய 15 வருடம் 232 நாட்கள் வயதான பதின்பருவ சிறுவன் அந்தப் போட்டியில் சதமடித்து அசத்தினான்.
முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த இந்தியர்களில் மிகவும் இளையவர் என்ற சாதனை அந்தச் சிறுவனுடையது. சச்சின் பற்றிய விரிவான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



