காஸா: இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பள்ளியை தாக்கிய இஸ்ரேல்

காணொளிக் குறிப்பு, காஸா
காஸா: இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பள்ளியை தாக்கிய இஸ்ரேல்

காஸாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வடக்கு காஸாவில் உள்ள ஒரு பள்ளி தங்கும் முகாமாக இருந்தது.

ஆனால், வியாழக்கிழமை இந்தப் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. ஆனால், இஸ்ரேலோ இதை பள்ளி என குறிப்பிடாமல், ஹமாஸ் கட்டளைகளை பிறப்பிக்கக்கூடிய, அதன் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள முக்கிய பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கியதாக கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு