அமெரிக்கா: பதவியேற்பு விழாவில் வாளுடன் உற்சாகமாக நடனமாடிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு, அமெரிக்கா: பதவியேற்பு விழாவில் வாளுடன் உற்சாகமாக நடனமாடிய டிரம்ப்
அமெரிக்கா: பதவியேற்பு விழாவில் வாளுடன் உற்சாகமாக நடனமாடிய டிரம்ப்

அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு அவர் அதிபராக பதவியேற்றார்.

டிரம்பின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் "எதிர்காலம்" எப்படி இருக்கும் என்பதை டிரம்ப் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

"அமெரிக்காவின் பொற்காலம் இன்று துவங்குகிறது. இனி நம் நாடு செழிப்பாகவும், மதிப்புக்குரியதாகவும் இருக்கும். நான் எப்போதும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுப்பேன் என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்" என்றார் அவர்.

பதவியேற்பு விழாவில், வாளுடன் அவர் ஆடிய நடனம் இணையத்தில் வைரலானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)