காணொளி: தைவானில் நெருப்பைக் கக்கிய 'சேற்று எரிமலை'
காணொளி: தைவானில் நெருப்பைக் கக்கிய 'சேற்று எரிமலை'
தெற்கு தைவானில் mud volcano எனப்படும் சேற்று எரிமலை வெடித்தது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்த எரிமலை சுமார் 11 முறையாக வெடித்துள்ளது.
Mud volcano என்றால் என்ன? அது எப்படி நடக்கிறது?
எரிமலைக் குழம்பு, சாம்பல் போன்றவற்றை உமிழும் சாதாரண எரிமலையில் இருந்து இந்த சேற்று எரிமலை மிகவும் வேறுபட்டது.
அப்பெயர் குறிப்பிடுவது போல, இந்த எரிமலை வெடிக்கும்போது சேறு வெளிவருகிறது. இந்த சேறு, நீர், மண் படிமங்கள், பொதுவாக களிமண் மற்றும் வாயு ஆகியவற்றின் கலவையாகும்.
சில நேரங்களில் புதிய வெடிப்பு ஒரு புதிய வாயிலில் ஏற்படுகிறது, அது முக்கிய மண் எரிமலையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் எங்கும் இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



