பாகிஸ்தானிலிருந்து திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்- இந்தியாவில் இருக்கும் குடும்பத்தினர் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, கம்லிபாய் குடும்பத்தினர் அவரை இந்தியாவுக்குள் அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்- இந்தியாவில் இருக்கும் குடும்பத்தினர் சொல்வது என்ன?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய விசாவை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்தியா குடிமக்கள் உடனடியாக நாடு திரும்பவும் அறிவுறுத்தியுள்ளது. அட்டாரி - வாகா எல்லையும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாக்பூரைச் சேர்ந்தவரான கம்லி பாய் தற்போது நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தானில் சிக்கித் தவிப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் கணவர் பெயர் ரவி குக்ரேஜா

ரவி குக்ரேஜாவின் குடும்பம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்தது. 2009ஆம் ஆண்டு அவர்கள் நீண்ட கால விசாவில் இந்தியாவில் நிரந்தரமாக குடியேறினர்.

"என் மனைவியின் அம்மா வீட்டில் ஒரு திருமணம் இருந்ததால் பாகிஸ்தானுக்குப் பயணிக்க வேண்டியிருந்தது. மே 6 திருமணம் இருந்தது. ஆனால் எல்லை மூடல் அறிவிக்கப்பட்ட இரவு, அவர் உடனடியாக வெளியேற வேண்டியிருந்தது. அவர்கள் எல்லையில் சிக்கி

"இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே அட்டாரி எல்லையைக் கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நீண்ட கால விசாவில் பயணம் செய்தவர்களுக்கு எல்லை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து அரசாங்கத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை." என்கிறார் அவரின் கணவர்.

தனது மனைவியை இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய விரைவில் அனுமதிக்குமாறு ரவி குக்ரேஜா இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு