செயற்கை வைரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய 7.5 காரட் வைரத்தைப் பரிசாக அளித்துள்ளார்.
அந்த வைரம் விலைமதிப்பற்றது, நவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது.ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரமாக இருந்தாலும்கூட, பூமியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வைரத்தை ஒத்த ரசாயன மற்றும் ஒளியியல் பண்புகளை இது கொண்டுள்ளது.
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரம் என்றால் என்ன, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, அதன் சிறப்பு என்ன, சாதாரண வைரங்களில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு பிரதமர் மோதி பரிசளித்த வைரம் குஜராத் மாநிலம் சூரத்தில் தயாரிக்கப்பட்டது.
இந்தியாவில் வைரத் தொழிலின் மையம் என்று சூரத் அழைக்கப்படுகிறது. உலகின் ஒவ்வொரு 11 வைரங்களிலும் 9 வைரங்கள், சூரத்தில் வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்டவையாக இருக்கின்றன. (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



