பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றி
பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. பிரிட்டனில் உள்ள 650 இடங்களில் 400க்கும் மேற்பட்ட இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைக்க 326 இடங்களே தேவைப்படும் நிலையில், தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரப் போவது உறுதியாகிவிட்டது. இதன் மூலம் 14 ஆண்டு கால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டாமர் பிரதமராக பொறுப்பேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
"நாம் சாதித்து விட்டோம். மாற்றம் இப்போது தொடங்குகிறது" என்று பிரிட்டன் நாட்டு மக்களிடம் கூறினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் பதவியை இழக்கிறார். இந்த தோல்விக்கு தான் பொறுப்பேற்பவ்தாகவும், கற்றுக்கொள்ளவும் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



