'நான் நடப்பதை பார்த்து குடித்திருக்கிறேன் என்று நினைப்பார்கள்' - சிறுமூளையை பாதிக்கும் அடாக்ஸியா என்றால் என்ன?
'நான் நடப்பதை பார்த்து குடித்திருக்கிறேன் என்று நினைப்பார்கள்' - சிறுமூளையை பாதிக்கும் அடாக்ஸியா என்றால் என்ன?
டல்லுலா கிளார்கின் கால்கள் அவர் சொல்வதை கேட்பதில்லை.
"நான் ஒரு பக்கம் செல்ல நினைத்தால் என் கால்கள் என்னை வேறு பக்கம் இழுத்துச் செல்லும்" என்கிறார் அவர்.
அடாக்ஸியாவால் பாதிக்கப்பட்டால் இப்படித்தான் நடக்கும். தனக்கு வந்துள்ள இந்த நோய் அரிதானது என்கிறார் டல்லுலா கிளார்க்.
சிறுமூளையில் ஏற்படும் பாதிப்புதான் அடாக்ஸியா. இதனால் நமது நிதானம், ஒருங்கிணைப்பு திறன் போன்ற பல விஷயங்கள் பாதிக்கப்படுகிறது.
இதனால் உங்களால் இயல்பாக நடக்க முடியாது.
14 வயதில் டல்லுலா நடந்து செல்வதை பார்த்த சிலர், அவர் குடித்திருப்பதாக கருதினர்.
அதை தவிர்க்க சில நேரங்களில் ஊன்றுகோளை பயன்படுத்துகிறார். சில நேரங்களில் சக்கர நாற்காலியையும் பயன்படுத்துகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



