மின்மினிகளைப் படமெடுத்து சர்வதேச விருது பெற்ற தமிழர்

காணொளிக் குறிப்பு, மின்மினிகளைப் படமெடுத்து சர்வதேசப் பரிசு பெற்ற இந்தத் தமிழர் யார்? - காணொளி
மின்மினிகளைப் படமெடுத்து சர்வதேச விருது பெற்ற தமிழர்

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் (NHM) மதிப்புமிக்க விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ள 19 உலகளாவிய திறமையாளர்களில் இந்திய புகைப்படக் கலைஞர்கள் ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான, கோவையை அடுத்த டாப்சிலிப் வனத்தில், மின்மினிப் பூச்சிகளை படம் பிடித்துள்ள தமிழரான ஸ்ரீராம் முரளியும் ஒருவர்.

உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆனைமலை மற்றும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில், கோடை இரவில் இந்த அதிசயம் நடக்கிறது.

ஆண்டுதோறும், கோடையில் மழை பெய்தவுடன், டாப்சிலிப் மற்றும் நெல்லியாம்பதி காப்புக்காட்டில், இரவு நேரங்களில் கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகளால், மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் வனம் ஒளிர்கிறது. இதையே ஸ்ரீராம் முரளி புகைப்படமாக எடுத்துள்ளார்.

இவர் கூகுள் நிறுவனத்தில் தனது பணியை விட்டுவிட்டு தற்போது முழுநேர புகைப்படக் கலைஞராக இருக்கிறார்.

அவரது கதை காணொளியில்…

மின்மினிகளைப் படமெடுத்து சர்வதேசப் பரிசு பெற்ற இந்தத் தமிழர் யார்?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)