இலங்கையின் கொள்ளைக்கார யானைகள் - மனித உணவுக்கு யானைகள் அடிமையாவது ஏன்?

காணொளிக் குறிப்பு, இந்த கொள்ளைக்கார யானைகளில் பலவும் ஆண் யானைகள் தான்.
இலங்கையின் கொள்ளைக்கார யானைகள் - மனித உணவுக்கு யானைகள் அடிமையாவது ஏன்?

கடந்த சில வருடங்களாக இலங்கையின் காட்டு யானைகள், மனிதர்களிடமிருந்து உணவைப் பெற சாலையில் திரிவது அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் மீதமான உணவை சாலையில் கொட்டுவதால், பசியுடன் இருக்கும் யானைகளுக்கு இவை எளிதான உணவாகிவிட்டது.

“முன்பு இப்படி இல்லை, இப்போதுதான் இது நடக்கிறது” என்கிறார் பேராசிரியர் அசோக தங்கொல்ல. இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவத்துறையில் பணிபுரிகிறார்.

“பல மிருகங்கள் பசிக்காக இதை உண்கின்றன. ஆனால் விசித்திரம் என்னவென்றால், காட்டில் உணவு இருந்தாலும், பசியில் உள்ள யானைகள் அங்கு செல்வதில்லை, பிச்சை தான் எடுக்கின்றன” என்கிறார்.

இந்த கொள்ளைக்கார யானைகளில் பலவும் ஆண் யானைகள் தான். இதில் சில யானைகளுக்கு சாலை விபத்தில் காயமும் ஏற்பட்டுள்ளது. உணவுக்காக வாகனங்களையும், மக்களையும் தாக்குகின்றன இந்த யானைகள்.

இந்தப் பிரச்னையில் யானை மற்றும் மனித வாழ்வுக்கு ஆபத்து ஏற்படுவது மட்டுமல்லாது, யானைகளின் இனப்பெருக்கத்தையும் இது பாதிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

முழு விவரம் காணொளியில்.

இலங்கையின் கொள்ளைக்கார யானைகள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)