எவரெஸ்ட் சிகரத்தில் குவிந்துள்ள குப்பைகள் டிரோன் மூலம் அகற்றம்
எவரெஸ்ட் சிகரத்தின் கழிவுப் பிரச்னையை தீர்க்க டிரோன்கள் உதவுகின்றன. எவரெஸ்ட் சிகரத்தில் அதிகம் பேர் ஏறுவதால், குப்பைகளும் அதிகமாக குவிகின்றன. எவரெஸ்டில் 50 டன் கழிவுகள் மற்றும் 200 சடலங்கள் இருப்பதாக கழிவுகளை மக்கள் கீழே கொண்டு வருவதற்கு மாற்று வழிகள் எதுவும் இல்லை.
"டிரோன்கள் உதவியால் 5-6 மணிநேரம் எடுக்கும் ஒரு வேலையை, இப்போது வெறும் 10 நிமிடங்களில் திறம்படச் செய்துவிட முடிகிறது" என்கிறார் சாகர்மாதா மாசு கட்டுப்பாடு கமிட்டியின் தலைமை செயல் அதிகாரியான ஷெரிங் ஷெர்பா.
சிலர் ஷெர்பாக்களின் வாழ்வாதாரத்தை இது பறித்துவிடும் என அஞ்சுகின்றனர். ஆனால், "நாங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கவில்லை. அவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளோம். அந்த உயரத்தில் ஒரு கிலோ எடை 100 கிலோவை போல் உணர வைக்கும். இப்படியொரு ஆபத்தான பணியை டிரோன்கள் எடுத்துக் கொண்டுள்ளன." என்கிறார் ஏர்லிஃப்ட் டெக்னாலஜியின் இணை நிறுவனர் மிலன் பாண்டே.
நேபாள ராணுவம், 11 டன் குப்பைகள், 4 சடலங்கள் மற்றும் ஒரு எலும்புக்கூட்டை எவரெஸ்ட் மற்றும் பிற இரண்டு சிகரங்களில் இருந்து கடந்த ஆண்டு அகற்றியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



