அணுசக்தி பற்றி இரான் எடுத்த முக்கிய முடிவு - சர்வதேச சமூகத்தால் கண்காணிக்க முடியாதா?
இரான் நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணுசக்தி முகமை உடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது இரான். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதன் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களைக் காரணம் காட்டி இந்த முடிவை எடுத்துள்ளது இரான்.
இந்த நடவடிக்கை, சர்வதேச அணுசக்தி முகமை IAEA உடனான பதற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இது இரானின் அணுசக்தி திட்டத்தை உலகளாவிய முறையில் கண்காணிப்பதில் பெரிய இடைவெளியையும் ஏற்படுத்தக்கூடும்.
கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக IAEA-ன் ஆய்வுகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அது சார்ந்த அறிக்கைகளை வெளியிடுவது போன்றவற்றை நிறுத்தும்.
இந்த மசோதாவுக்கு, இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், இரானின் அணுசக்தி திட்டம் குறித்த கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இந்த மசோதா குறிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



