"மரணமில்லா வாழ்வு" - ரஷ்யா, சீனா அதிபர்கள் பேசியது என்ன?
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் உச்சி மாநாடு மற்றும் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்க சென்றார் ரஷ்ய அதிபர் புதின். அப்போது ஒரு தருணத்தில் ரஷ்ய அதிபரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நடந்து செல்லும் போது அவர்கள் இருவருக்கு இடையில் பேசிக் கொண்டவை அருகில் இருந்த மைக்கில் பதிவாகியது.
இருவரும் தங்கள் மொழிகளில் பேசிக் கொண்ட நிலையில், மொழிபெயர்ப்பாளர்களின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.
அதில் அவர்கள் உறுப்பு மாற்று சிகிச்சை குறித்தும், சாகா நிலைக்கான சாத்தியங்கள் இருப்பது குறித்தும் பேசும் சுவாரஸ்யமான உரையாடலை கேட்க முடிகிறது.
"கடந்த காலத்தில், மக்கள் அரிதாகவே 70 வயதுக்கு மேல் வாழ்ந்தனர், ஆனால் இன்று 70 வயதிலும் உங்களை ஒரு குழந்தை என அழைக்கின்றனர்." என்று ஷி ஜின்பிங் கூறினார்.
இதற்கு பதிலளித்த புதின்,"மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்றலாம். எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக மாறுவீர்கள். சாகாநிலைக்கும் கூட செல்லலாம்" என்றார்.
இந்த நூற்றாண்டில், மனிதர்கள் 150 வயது வரை வாழக்கூடும் என்று சிலர் கணிக்கிறார்கள்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



