ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை - மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
இரானின் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, தெஹ்ரானில் உள்ள வீட்டில் வைத்து கொல்லப்பட்டார்.
அகதிகள் முகாமில் பிறந்து வளர்ந்த இவர் 80களின் பிற்பாதியில் ஹமாஸில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 2006ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் பிரதமராக பதவியேற்றார். ஒரே ஆண்டில் அவர் அந்த பதவியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது.
2017ம் ஆண்டு அவர் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டார்.
2018ம் ஆண்டு, அமெரிக்க உள்துறை அமைச்சகம் ஹனியேவை பயங்கரவாதியாக அறிவித்தது. பாலத்தீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹனியே கடந்த சில ஆண்டுகளாக கத்தாரிலும் துருக்கியிலுமாக மாறிமாறி வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் 2017 இல் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை 2018 இல் பயங்கரவாதியாக அறிவித்தது.
காஸாவில் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கான பேச்சுவார்த்தையில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், EPA
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



