குரோர்பதி நிகழ்ச்சி: மிக இளம்வயதில் கோடீஸ்வரன் ஆன சிறுவன் யார்? – காணொளி

காணொளிக் குறிப்பு, குரோர்பதி நிகழ்ச்சி: மிக இளம்வயதில் கோடீஸ்வரன் ஆன சிறுவன் யார்? – காணொளி
குரோர்பதி நிகழ்ச்சி: மிக இளம்வயதில் கோடீஸ்வரன் ஆன சிறுவன் யார்? – காணொளி

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கவுன் பனேகா கரோர்பதி' நிகழ்ச்சியில் ஹரியாணா மாநிலம் மஹேந்திகர் பகுதியைச் சேர்ந்த மயங்க் என்ற எட்டாம் பகுப்பு படிக்கும் மாணவர் ரூ 1 கோடியை வென்றுள்ளார்.

மொத்தம் உள்ள 16 கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால், ரூ 7 கோடி வெல்ல முடியும் என்ற நிலையில், 15 கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து ரூ 1 கோடியை வென்றுள்ளார் மயங்க்.

மயங்க்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாங்கள் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்கிறார்கள் மயங்கின் பெற்றோர். அதேநேரத்தில், அமிதாப் பச்சனை பார்ப்பதற்காகத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், ரூ 1 கோடி வெல்வேன் என தான் நினைக்கவில்லை என்றும் மயங்க் பிபிசியிடம் கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)