அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு எதிராக காலிஸ்தான் கொடி ஏந்தி போராட்டம்

காணொளிக் குறிப்பு,
அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு எதிராக காலிஸ்தான் கொடி ஏந்தி போராட்டம்

கடந்த மார்ச் 5ஆம் தேதி, பிரிட்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு எதிராக காலிஸ்தான் கொடியேந்தியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்துக்கு இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ''வெளியுறவு அமைச்சரின் பிரிட்டன் பயணத்தின்போது பாதுகாப்பு மீறல் தொடர்பான காட்சிகளை பார்த்தோம். பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அடங்கிய இந்த சிறு குழுவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ''இதுபோன்ற சூழல்களில் நிகழ்ச்சி நடக்கும் நாட்டின் அரசு தங்களின் ராஜ்ஜீய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்'' என்றும் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)