நியூ யார்க் நகரில் உறைபனி - தாக்கத்தை உணர்த்தும் புகைப்படங்கள்

    • எழுதியவர், குவாசி ஜியாம்ஃபி அசிடூ

அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணம் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவைச் சந்தித்துள்ளது.

நியூ யார்க் நகரின் சென்ட்ரல் பார்கில், 11 செமீ அளவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

மாகாணத்தின் மற்ற இடங்களில் 19 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை துறை தெரிவித்துள்ளது.

பனிப்புயல் காரணமாக மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட கவுன்டிகளில் நியூ யார்க் ஆளுநர் கேத்தி ஹோசுல் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

சனிக்கிழமை, நியூ யார்க் பகுதியில் 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானங்களை கண்காணிக்கும் இணையதளமான ஃப்ளைட் அவேரின்படி, நாடு முழுவதும் 8000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.

சனிக்கிழமை அன்று நியூ யார்கின் மத்தியப் பகுதியான சிராக்யூஸிலிருந்து தென் கிழக்கு பகுதியான லாங் ஐலான்ட் வரை 15 செமீ முதல் 25 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

அதிக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நியூ ஜெர்சியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கனெக்டிகட்டில் உள்ள ஃபேர்ஃபீல்ட் கவுன்டியில் 22 செமீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

பனிப்புயல் தற்போது குறைந்திருந்தாலும் வெப்ப நிலை உறைய வைக்கும் நிலையிலும் சாலைகள் ஆபத்தான நிலையிலும் உள்ளன.

வீடற்றவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவதற்கான கோட் ப்ளூ நியூ யார்க் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு