காணொளி: பாம்புகளோடு வசிக்கும் பூசாரி - குஜராத்தில் விநோத கோவில்
காணொளி: பாம்புகளோடு வசிக்கும் பூசாரி - குஜராத்தில் விநோத கோவில்
பாம்புகளை பார்த்தாலே மக்கள் ஓடிவிடுவார்கள். ஆனால், குஜராத்தில் உள்ள இந்த கோவிலில் பாம்புகள் சர்வ சாதாரணமாக அலைகின்றன.
ராஜ்கோட்டில் உள்ள இந்த கோவிலின் பூசாரி மனுபாய், பாம்புகளுடன் பல ஆண்டுகளாக ஒரே குடும்பமாக வாழ்ந்துவருகிறார். இங்கே 50க்கும் மேற்பட்ட பாம்புகள் பல ஆண்டுகளாக வசித்துவருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
நாக பஞ்சமி நாளில் கோவிலில் பிரமாண்டமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அன்று பக்தர்கள் பாம்புகளுக்கு பால், சாக்லேட், தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர்.
இந்த பாம்புகள் யாருக்கும் தீங்கு செய்வதில்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



