மணப்பாறை: பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு, சூறையாடப்பட்ட பள்ளி

காணொளிக் குறிப்பு,
மணப்பாறை: பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு, சூறையாடப்பட்ட பள்ளி

திருச்சி மணப்பாறையில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் சம்பவத்தில் பள்ளி ஒன்று சூறையாடப்பட்டது.

தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பள்ளி முன்பு திரண்ட மாணவியின் உறவினர் பள்ளியைச் சேதப்படுத்தினர்.

இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)