ஸ்பெயின்: வெள்ளம் பாதித்த பகுதிக்கு சென்ற அரசர் மீது சேற்றை வீசிய போராட்டக்காரர்கள்

காணொளிக் குறிப்பு,
ஸ்பெயின்: வெள்ளம் பாதித்த பகுதிக்கு சென்ற அரசர் மீது சேற்றை வீசிய போராட்டக்காரர்கள்

ஸ்பெயினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெலென்சியா பகுதியைப் பார்வையிடச் சென்ற அரசர் மற்றும் ராணி மீது போராட்டக்காரர்கள் சேற்றை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசர் ஃபிலிப்பெய், ராணி லெட்டிசியா ஆகியோரின் ஆடைகளிலும் உடலிலும் சேறு காணப்பட்டது.

ஸ்பெயினில் சமீபத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டத்தில், 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

வெள்ளம் குறித்து முறையான எச்சரிக்கை விடுக்கவில்லை, வெள்ளத்திற்குப் பிந்தைய உதவிகள் போதியதாக இல்லை என்ற கோபம் போராட்டக்காரர்கள் இடையே நிலவுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)