ஸ்பெயின் மின்வெட்டு: போக்குவரத்து நெரிசலால் நீண்ட வரிசையில் நிற்கும் கார்கள்

காணொளிக் குறிப்பு,
ஸ்பெயின் மின்வெட்டு: போக்குவரத்து நெரிசலால் நீண்ட வரிசையில் நிற்கும் கார்கள்

ஸ்பெயின் மற்றும் போர்சுகலின் பெரும்பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டது.

இந்த மின்வெட்டால் பொதுப்போக்குவரத்து நிறுத்தம், விமானங்கள் தாமதம், போக்குவரத்து நெரிசல் என குழப்பமும் இடையூறும் ஏற்பட்டது. இதனால் ஸ்பெயினில் அவசர கால நிலையும் பிறப்பிக்கப்பட்டது.

மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறும் அதிகாரிகள், சைபர் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும் கூறினர்.

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கார்கள் நீண்ட வரிசையில் நின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.