சாலை நடுவே 3 பேரின் உயிரை பறித்த எஸ்யுவி கார் - சிசிடிவி காட்சி

காணொளிக் குறிப்பு, சாலை நடுவே 3 பேரின் உயிரை பறித்த எஸ்யுவி கார் - சிசிடிவி காட்சி
சாலை நடுவே 3 பேரின் உயிரை பறித்த எஸ்யுவி கார் - சிசிடிவி காட்சி

எச்சரிக்கை: இந்த காணொளியில் சங்கடம் தரும் காட்சிகள் உள்ளன

ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி மூன்று பேர் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 8-ம் தேதி இரவு இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள நகர்கர் பகுதியில் நடைபெற்றது.

இந்த காணொளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவை என அனைத்தின் மீதும் ஒரு கார் மோதிச் சென்றது.

விபத்துக்குப் பிறகு காரை அப்படியே விட்டு விட்டுத் தப்பிச் சென்ற குடிபோதையில் இருந்த ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு