மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை

காணொளிக் குறிப்பு, உலகின் இளம் டேக்வாண்டோ பயிற்சியாளர் - கின்னஸ் சாதனை புரிந்த மதுரை சிறுமி
மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை

சம்யுக்தா நாராயணன் - 'உலகின் இளம் டேக்வாண்டோ பயிற்சியாளர்' என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார் இவர். மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா, 7 வருடங்கள் 270 நாட்களில் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

சம்யுக்தாவின் தந்தை நாராயணன், மதுரையில் ஒரு டேக்வாண்டோ அகாடமி நடத்திவருகிறார். அவரே சம்யுக்தாவின் குரு. சம்யுக்தாவின் தாய் ஸ்ருதி நாராயணனும் ஒரு டேக்வாண்டோ பயிற்சியாளரே.

தினமும் 2 மணிநேரம் டேக்வாண்டோ பயிற்சிக்கு செலவிடுகிறார் சம்யுக்தா.

தனது வயதையொத்த பிள்ளைகளுக்கு டேக்வாண்டோ கற்றுத்தரும் சம்யுக்தா, தென் கொரியாவின் உலக டேக்வாண்டோ தலைமையகத்திலிருந்து 'பிளாக் பெல்ட்' பெற்றுள்ளார்.

தயாரிப்பு: சிராஜ்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: டேனியல்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு