காணொளி: ஓஎன்ஜிசி எரிவாயு குழாயில் கசிவு; தீ பற்றியது
காணொளி: ஓஎன்ஜிசி எரிவாயு குழாயில் கசிவு; தீ பற்றியது
ஆந்திர மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தின் மளிகிபுரம் மண்டலம், இருசுமண்டா பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி டிரில் தளத்தில் வாயு கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.
இந்த சம்பவம் குறித்து ராஜுலு சிஐ நரேஷ்குமார் பிபிசியிடம் பேசுகையில், இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிராம மக்களுக்கு வீடுகளை காலி செய்து வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போதைக்கு எந்த அபாயமும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் சிஐ நரேஷ் குமார் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



