தொகுதி மறுவரையறை: மணிப்பூரை உதாரணம் காட்டி ஸ்டாலின் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, 'மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் உண்மையான கூட்டாட்சி உருவாகும்' - முதலமைச்சர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை: மணிப்பூரை உதாரணம் காட்டி ஸ்டாலின் பேசியது என்ன?

"எந்தவொரு ஜனநாயக பிரதிநிதித்துவ நடவடிக்கையையும் தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது" என்று தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆற்றிய வரவேற்புரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று (மார்ச் 22) சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டதுதான் இந்தியா. அப்படியிருக்க மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாகும்." என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு